Advertiment

இன்று சூரசம்காரம். -அறுபடை வீடுகளில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்வு

by Admin

ஆன்மீகம்
இன்று சூரசம்காரம். -அறுபடை வீடுகளில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்வு

இன்று சூரசம்காரம். அறுபடை வீடுகளில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்வு மதியம் மூன்று முப்பது மணி அளவில் தொடங்குகிறது. குரு ஸ்தலமாகவும் அறுபடை வீடுகளில் இரண்டாவது  தலமாகவும் கொண்டாடப்படும் திருச்செந்தூரில் இன்று வெகு விமர்சையாக கோலாகலமாக சூர சங்கார தெய்வீக காட்சி நடைபெற உள்ளது. நாளை திருக்கல்யாணம் சிறப்புடன் நடைபெறுவதோடு சஷ்டி விரதம் பூர்த்தி அடைகிறது. திருச்செந்தூரில் சூரசம்கார விழாவை காண்பதற்காக பக்தர்கள் சாரசாரையாக கடற்கரையில் குவிந்த வண்ணம் உள்ளனர். கடலின் ஆரவாரிப்பை போலவே மக்களின் பக்தி ஆரவாரம் கடல் அலைகளின் ஒலிகளோடும் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன.

சூரபத்மன் என்ற அரக்கன் தேவர்களை சித்திரவதை செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. விஷ்ணு மற்றும் பிரம்மாவிடம் முறையிட்டனர். சிவபெருமானை எழுப்ப காமதேவர் அனுப்பப்பட்டார், அவர் பின்னர் கார்த்திகேயனைப் பெற்றெடுத்தார். கார்த்திகேயன் சூரபத்மனைக் கொன்று தேவர்களைக் காப்பாற்றினான். ஸ்கந்த புராணத்தில் எழுதப்பட்டுள்ளது.திருத்தணி – சுவாமிமலை – பழனி – பழமுதிர்ச்சூலை – திருப்பரங்குன்றம் – திருச்செந்தூர்.

Share via