
அமரன் படத்தை பார்த்த ரஜினிகாந்த் அதில் முகுந்து வரதராஜன் ஆக ராணுவ வேடத்தில் நடித்த சிவகார்த்திகேயனையும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி நேரில் அழைத்து படம் மிக அருமையாக வந்திருப்பதாகவும்பாராட்டினார். ராணுவ வீரர்கள் அங்கே படும் கஷ்டங்களை மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள். ராணுவ வீரர்கள் அங்கே எல்லையை காக்க வில்லை என்றால் நாம் இங்கே நிம்மதியாக வாழ முடியாது என்று பாராட்டியதோடு உடன் நடித்த நடிகை சாய் பல்லவி அருமையாக நடித்திருப்பதாகவும் பாராட்டினார்.
இந்த படத்தை எடுத்த எனது நண்பர் கமலஹாசனுக்கு ரொம்ப நன்றியை சொல்லிக் கொள்கிறேன் என்றும் சொன்னார். ரஜினி அமரன் படத்தை பாராட்டியதை தொடர்ந்து கமலஹாசன்அன்பும் வாழ்த்து அளவற்ற மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி இனிய நண்பரே ரஜினிகாந்த் என்று, ரஜினிக்கு நன்றி தெரிவித்து வலைதள பதிவில் பதிவிட்டுள்ளார்.