Advertiment

எவ்விதப் படிப்பைத் தொடர்வது, எங்கு படிப்பது, ..

by Admin

கல்வி
 எவ்விதப் படிப்பைத் தொடர்வது, எங்கு படிப்பது, ..

கோவில்பட்டி,எம்.எம்.வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ பள்ளியில்     மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான  வழிகாட்டுதல் கருத்தரங்கம் பள்ளி இயக்குநர் முத்துபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.பள்ளி நிர்வாக உறுப்பினர்களான . கலா நாதன்,ஜோதிமாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,இக்கருத்தரங்கில் முன்னாள் டி.ஜி.பி..சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவ-மாணவியர் அடுத்து எவ்விதப் படிப்பைத் தொடர்வது, எங்கு படிப்பது, எந்தத் துறையில் கவனம் செலுத்துவது, எந்தப் பட்டப்படிப்பைத் தேர்ந்தெடுப்பது போன்ற கல்வி வழிகாட்டுதல் கருத்துகளை வழங்கியதுடன் , மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து அவர்களுடன் சைலேந்திரபாபு உரையாடினார்.வாழ்வியல், உளவியல், அரசியல், விண்ணியல் மின்னியல் அறிவியல், கணக்கியல், சமூக வலைதளங்கள், சிவில் சர்வீசஸ் தேர்வுக்குரிய நுணுக்கங்கள் சார்ந்த கேள்விகளுக்கு 6-ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பதிலளித்தனர்.மிகவும் சாமர்த்தியமாக பதிலளித்தவர்களுக்கு தான் எழுதிய தன்னம்பிக்கை ததும்பும் புத்தகங்களை பரிசளித்து சைலேந்திர பாபு அஅந்த  மாணவர்களைப் பாராட்டினார். தொடர்ந்து நூலகம் மற்றும் ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்பறைகளுக்கு நேரடியாக சென்று மழலையர்களுடன் கலந்துரையாடினார்.சைலேந்திர பாபு வுக்கு பள்ளி முதல்வர் ராபர்ட் குமார் நினைவுப்பரிசு வழங்கி சிறப்பித்தார். இக்கருத்தரங்கில் மாணவ மாணவிகள் பலர் பெற்றோர்களுடன் கலந்து கொண்டதுடன் பிற பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்தும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

 

Share via

More Stories