
இந்திய கிரிக்கெட் அணி வங்காள தேசத்திற்கு எதிரான மூன்று டி20 போட்டியில் மூன்றிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த டி20 போட்டியில் இந்திய அணியும் வங்காள சனியும் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களத்தில் இறங்கிய இந்திய அணி 20 ஓவரில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 297 ரங்களை எடுத்தது .298 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களம் இறங்கிய வங்காளதேஷ் அணி 20 ஓவர் ஏழு விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை மட்டுமே எடுத்தது .
இதன் மூலம் இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.