
இன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை. நவராத்திரி ஒன்பதாவது தினம். இந்த தினத்தில் அனைவரும் அவரவர்கள் மேற்கொள்ளும் தொழில்களினுடைய கருவிகளையும் புத்தகங்களையும் வைத்து வழிபடுவது தொன்று தொட்டு நிகழ்ந்து வரும் மத நம்பிக்கையாகும். நவராத்திரியின் கடைசி நாளான பத்தாவது நாளில் வித்யாரம்பம், மகிஷாசுரனை தேவி வதம் செய்து தீமையை அளித்த நாளாகவும் கல்வி கற்போர் தொழில் செய்வோம் தங்களது தொடக்கத்தை செய்யக்கூடிய நாளாகவும் இது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகின்ற நாளாகும். பள்ளி கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவர்களின் பாட புத்தகங்களை சரஸ்வதி முன்பாக வைத்து வழிபடப்படுவதன் மூலமாக அவர்களுக்கு கல்வியின் உடைய ஆற்றல் பெருகும் என்றும் ஆயுத பூஜை அன்று வீட்டில் பயன்படுத்தும் ஆயுதங்கள் வாகனங்கள் ஆகியவற்றை வைத்து வழிபாடு செய்வதன் மூலமாக தொழில் வளர்ச்சி பெரும் என்கிற நம்பிக்கையில் இந்துக்கள் வழிபடுகின்ற ஒரு உன்னதமான நாளாகும்.
பூஜை நேரம்- காலை-8.20-10.20 மதியம்-12.00 -1.30, அந்தி சாயும் 6.00 க்கு மேல் செய்யலாம்.