Advertiment

அண்ணாமலையார்  கோயிலில் நவராத்திரி விழா.

by Editor

ஆன்மீகம்
அண்ணாமலையார்  கோயிலில் நவராத்திரி விழா.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார்  திருக்கோவிலில் நவராத்திரி விழா மூன்றாம் நாள் உற்சவத்தில் அம்பாள் பராசக்தி அம்மன் அருள் தரும் கெஜலட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளி சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார்  திருக்கோயிலில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா தொடங்கி தொடர்ந்து 9 நாட்கள் அம்பாள் பராசக்தி அம்மன் திருக்கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழா கடந்த 3ம் தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து மூன்றாம் நாளான இன்று அம்பாள் பராசக்தி அம்மன் அருள் தரும் கெஜலட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது.

முன்னதாக அம்பாள் பராசக்தி அம்மனுக்கு சிவாச்சாரியர்கள் பச்சரிசி மாவு, சீகைக்காய் தூள், மஞ்சள் தூள், பால், பழம், தேன், தயிர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தனர். பின்னர் வண்ண வண்ண மலர் மாலை அலங்காரத்துடன் மகா பஞ்சமுக தீபாரதனை நடைபெற்றது.

Share via