
நடிகர் விஜயின் தளபதி 69 படத்தின் பூஜை இன்று நடந்தது. எச்..வினோத் இயக்கத்தின் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக இரண்டாவது முறையாக விஜய் உடன் சேர்ந்து நடிக்கிறார்.. இவருடன் அனிமல் பட வில்லன் பாபி தி யோல்,பிரகாஷ் ராஜ், நடிக்கின்றனர். இப்படத்தை கே. வி .என் நிறுவனம் தயாரிக்க உள்ளது .அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.. விஜய் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகத்தினுடைய மாநாட்டை வரும் 27-ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் , மாநாட்டிற்கான பந்தகால் நடும் பூஜைக்கு செல்லாமல் தம் கடைசி படமான இந்த படத்தில் நடிப்பதற்காக சென்றுள்ளார்.. இன்று பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது.