
ஐ சி சி உலகக்கோப்பை மகளிர் டி20 போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய மகளிர் அணியும் நியூசிலாந்து மகளிர் அணியும் மோதின. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கி ஆடியது. இருபது ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. 161 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கோடு களம் இறங்கிய இந்திய அணி 19 ஓவரி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்கள் மட்டுமே எடுத்தது 58 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி இந்திய மகளிர்அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.