
நடிகர் சூர்யா கங்குவா படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை அடுத்து அவரது 45- வது படத்தை ஆ.ர் ஜே. பாலாஜி இயக்க உள்ளதாகவும் அனிருத் படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் அனிருத் இசை அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.