Advertiment

திருப்பதியில் பரிகார பூஜை நடத்துவது தொடர்பாக ஆலோசனை. 

by Editor

ஆன்மீகம்
திருப்பதியில் பரிகார பூஜை நடத்துவது தொடர்பாக ஆலோசனை. 

புண்ணிய ஸ்தலமான திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் நாட்டில் மிருக கொழுப்புகள் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடந்த ஆட்சியில் பிரசாதம் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டு கொழுப்பு ,மீன் கொழுப்பு ,பன்றி கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை பெரும் அதிர்வலையை உருவாக்கியது. இந்நிலையில் ,முன்னாள் தேவஸ்தான தலைவர்  நெய்யில் கலப்படம் செய்திருந்தால் என் குடும்பம் அழிந்து போகட்டும் என்று சூளுரை செய்தார். தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துக்கள் விவாத பொருளாக மாறின டாக்டர் சுப்பிரமணியசாமி கூட நெய்யில் கலப்படம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து உள்ளார். இந்நிலையில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆலோசனை நிகழ்த்தினார்.திருப்பதியில் பரிகார பூஜை நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் தேவஸ்தான அதிகாரிகள்  லட்டு பிரசாதத்தில் கலப்படத்தை அடுத்து பரிகார பூஜை செய்வது குறித்தும்   திருப்பதி பிரமோற்சவத்தக்கு நேரில் அழைப்பு விடுத்தும் ஆலோசனை நடத்தினர்.

Share via