
தென்காசி நகரில் அமைந்துள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலய 362 வது ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பாரம்பரியமாக தென்காசி மாவட்டம் அகரக்கட்டு கிராமத்தைச் சேர்ந்த பங்குமக்கள் சார்பில் திருக்கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு ஏற்றப்படுவது வழக்கம் இதனை முன்னிட்டு அகரக்கட்டு கிராமத்தில் இருந்து திருக்கொடியுடன் 300க்கும் மேற்பட்ட இறை மக்கள் திருக்கொடியுடன் ஊர்வலமாக வந்து பின்னர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. கொடியேற்று விழாவில் கிறிஸ்தவ முஸ்லிம் இந்து ஆகிய மும்மதத்தை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர். திருவிழா இன்று முதல் செப்டம்பர் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும். இந்த ஆலயத்திற்கு தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இறை மக்கள் திருவிழாவில் கலந்து கொள்ள வருகை தருவார்கள். பத்தாம் நாள் திருவிழா நடைபெறும் செப்டம்பர் 29ஆம் தேதி நடைபெறும் திருப்பலி மலையாள மொழியில் நடைபெறுவது வழக்கம். அந்நாளில் ஆயிரக்கணக்கான கேரளாவைச் சேர்ந்த இறை மக்கள் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.