Advertiment

இந்தியா முழுவதும் தேசிய சினிமா தினம் - 99 ரூபாய்க்கு திரையரங்குகளில் பார்க்கும் வசதி.

by Admin

சினிமா
 இந்தியா முழுவதும் தேசிய  சினிமா தினம் - 99 ரூபாய்க்கு  திரையரங்குகளில் பார்க்கும் வசதி.

இந்தியா முழுவதும் உள்ள 4000 திரையரங்குகளில் நீங்கள் விரும்பிய திரைப்படத்தை விரும்பிய திரையரங்குகளில் பார்ப்பதற்கான வசதியை செப்டம்பர் இருபதாம் தேதி மல்டி பிளக்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா என்ற அமைப்பு இந்தச் சலுகையை வழங்கி உள்ளது. அன்று 2024 தேசிய சினிமா தினம் என்பதால் 99 ரூபாய்க்கு 4000 திரையரங்குகளில் எந்த திரையரங்கலும் நீங்கள் விரும்பிய படத்தை பார்ப்பதற்கான ஒரு சூழலை இந்த அமைப்பு வழங்கியுள்ளது. இது திரைத்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் சினிமா ஆர்வலர்களுக்கும் இந்த சலுகை ஒரு நல்வாய்ப்பாக அமைகிறது.

 இந்தத் திரையரங்குகளில் 99 ரூபாய் சலுகை விலையில் படம் பார்க்க விரும்புகிறவர்கள் தங்களுக்கான டிக்கெட்டை புக் மை ஷோ, பேடிஎம் போன்ற தளங்களிலும் பிவிஆர் மற்றும் சினி போலீஸ் இன்ன பிற இணையதளங்கள் வழியாகவும் நீங்கள் செப்டம்பர் 20ஆம் தேதி க்கான டிக்கெட்டை புக் செய்து திரையரங்களில் சமீபத்தில் வெளியான படங்களை பார்வையிடுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.

Share via