
லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமிதாப் பச்சன் நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு வரும் 20ஆம் தேதி 6 மணி அளவில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.. ஞானவேல் இயக்கி உள்ள இப் படம் அக்டோபர் 10 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.. மஞ்சு வாரியர் ,ரித்திகா சிங், ரக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 160 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக வெளிவர உள்ளது.