
இன்று பிரதோஷம்.
பிரதோஷம் என்பது சூரியன் மறைகிற நேரம். அதாவது 13- வது சந்திர நாளில் அல்லது திரியோதசி திதியில் நிகழும் ஒரு புனிதமான காலம். திரியோதசி மாதம் இரண்டு முறை வளர்பிறையின் போது ஒரு முறையும் சந்திரனின் தேய்மானத்தின் போது ஒரு முறையும் வரும்.. பிரதோஷத்தின் பொழுது சிவபெருமான் பார்வதி தேவியின் அருள் வேண்டி உண்ணாவிரதம் இருப்பது உத்தமம். இந்த பொழுதில் விரதம் இருந்து நம்பிக்கையோடு சிவனையும் பார்வதியையும் வழிபட்டால், நாம் விரும்புகின்ற விருப்பங்களையும் நமக்கு வந்த... வரவிருக்கின்ற துன்பங்களையும்... பிறப்பின் போது தொடர்ந்த கெட்ட கர்மாக்களையும் இது அழிக்க உதவும்.. மாதங்களில் பிற கிழமைகளில் வரக்கூடிய பிரதோஷங்களை விட சனிக்கிழமையில் வரக்கூடிய பிரதோஷம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்து மதத்தில் கருதப்படுகிறது. அதனால், இன்று ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம் . இந்தியா முழுவதும் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடுகள் சிறப்புற நடத்தப் பெறும்.