Advertiment

தெற்காசிய ஜூனியர் தடகளம்: தங்கப்பதக்கம் வென்று தென்காசி வீராங்கனை சாதனை.

by Editor

விளையாட்டு
தெற்காசிய ஜூனியர் தடகளம்: தங்கப்பதக்கம் வென்று தென்காசி வீராங்கனை சாதனை.

சென்னையில் நடைபெற்று வரும் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் சாதனை படைத்த தமிழ்நாடு வீராங்கனை அபிநயா ராஜராஜன்.100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 11.77 நொடிகளில் இலக்கை அடைந்து புதிய சாதனை.

சென்னையில் நடைபெற்று வரும் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 11.77 நொடிகளில் இலக்கை அடைந்து புதிய சாதனை படைத்துள்ளார் தமிழ்நாடு வீராங்கனை அபிநயா.தங்கப்பதக்கத்தை வென்று  தமிழ்நாட்டிற்கு இந்திய தேசத்திற்கும் பெருமையை சேர்த்துள்ள அவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்த தொடரில் இதற்கு முன்பாக 2018ம் ஆண்டு இலங்கை வீராங்கனை அமஷா சில்வா 11.92 நொடிகளில் இலக்கை அடைந்ததே சாதனையாக இருந்தது.இவர் தென்காசி மாவட்டம் கல்லூத்து கிராமத்தைச் சேர்ந்தவர்.

முதல் நாள் நடைபெற்ற போட்டிகளில் இந்திய வீரர்கள் 9 பதக்கங்களை கைப்பற்றி அசத்தியுள்ளனர். மூன்று நாட்கள் நடைபெறக்கூடிய இந்தத் தொடரின் முதல் நாளில் 6 பிரிவுகளில் இறுதிப்போட்டிகள் நடத்தப்பட்டன. ஆடவர் குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர்கள் தங்கம், வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினர். இந்திய வீரர் சித்தார்த் 19.19 மீட்டர் தூரம் குண்டு எறிந்து முதலிடம் பிடித்து அசத்தினார். மகளிர் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா 1.80 மீட்டர் உயரம் தாண்டி தெற்காசிய அளவிலான புதிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கழுத்தில் ஏந்தினார்.

அபிநயாவுக்கு முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் சிவ பத்மநாதன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதோடு தனது சொந்த ஊருக்கு பெருமை சேர்த்திருப்பது மிகவும் மகிழ்ச்சி என்று தெரிவித்துக் கொண்டார்.

Share via