Advertiment

 சனி பிரதோஷம் தென்காசி காசிவிஸ்வநாதர் ஆலயத்தின் கோபுரத்தை வட்டமிட்ட பருந்து. 

by Editor

ஆன்மீகம்
 சனி பிரதோஷம் தென்காசி காசிவிஸ்வநாதர் ஆலயத்தின் கோபுரத்தை வட்டமிட்ட பருந்து. 

இந்தியாவில் பிரசித்திபெற்ற வடகாசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சமமானதாக கருதப்படும்தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயத்தில்   ஆவணி மாத சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய தென்காசி,செங்கோட்டை சுற்றுவட்டாரப்பகுதிகளைசேர்ந்த நூற்றூக்கணக்கான பக்தர்கள்.குவிந்தனர்.இந்நிலையில் ஆவணி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு  சுவாமிக்கு எதிரே அருள் பாலிக்கும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. திரவிய பொடி, மஞ்சள் ,தயிர், பழச்சாறு ,தேன், பஞ்சாமிர்தம் ,பால், இளநீர் ,விபூதி ,சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களை  கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் நந்தி பகவானை வழிபாடு செய்தனர்.இந்தநிலையில் ஆலயத்தில் சனி பிரதோஷ பூஜைகள் நடந்தபோது ராஜ கோபுரத்தை பருந்து ஓன்று வட்டமிட்டதைக்கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
 

Share via