
சுவீடன் நாட்டில் நடைபெற்ற உலக முதியோர் தடகள போட்டியில் இந்தியா சார்பாக 89 வயதில் 1.600 கி.மீ ரிலே போட்டியில் தங்கப் பதக்கமும், 2000 மீட்டர் ஸ்டீப்பில்சேஸ் போட்டியில் வெள்ளி பதக்கமும், 400 மீட்டர் ரிலே போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்ற சிவகாசியைச் சேர்ந்த இராஜேந்திரன் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலனை சந்தித்து அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் முதியோர் தடகள வீரர் இராஜேந்திரனை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.