
அருள்மிகு ஸ்ரீ சரமாரியம்மன், திருக்கோவில் ஆடி மாத கொடை விழாவை முன்னிட்டு 108 பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சரமாரியம்மன் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சரமாரியம்மன் திருக்கோயிலில் ஆடி மாத கொடை விழாவை கடந்த 6ம் தேதி அன்று கால் நட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் ஸ்ரீ சரமாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் சிறப்பு தீபாரணங்கள் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நாளாக இன்று 108 பால்குடம் கோவில் இருந்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வலம் வந்து பின்னர் திருக்கோயிலுக்கு வந்தடைந்தது. ஸ்ரீ சரமாரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் சிறப்பு தீபாரணங்கள் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.