
சபரிமலை நிறைபுத்தரி பூஜை 12-08-24 திங்கட்கிழமை காலை 5.45 மணி முதல் 6.30 மணிக்கு நடைபெறுகிறது.அதற்காக பிரத்தேகமாக சபரிமலையில் 11-08-24 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நடை திறக்கபடுகிறது.
அச்சன்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 4.30 மணிக்கு நடை திறந்து நிர்மால்ய தரிசனம் முடித்ததும் 5 மணியளவில் அலங்கரிக்கபட்ட திருஆபரணபெட்டி வாகனத்தில் நிறைபுத்தரி நெல்கதிர்கள் ஏற்றபட்டு திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் தலைமையில் தேவசம்போர்டு அதிகாரிகள், அச்சன்கோவில் தேவஸ்வம், திருஆபரணபெட்டி கமிட்டி, உபதேச கமிட்டி நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் பங்கு பெறும் சபரிமலை நிறைபுத்தரி கோஷயாத்திரை ஊர்வலம் தொடங்கியது.நிறைபுத்தரி பூஜைக்கான நெல்கதிர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணிக்கு அச்சன்கோவிலில் இருந்து சபரிமலைக்கு ஊர்வலமாக புறப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திருஆபரணம் கமிட்டி தலைவர் ஹரிஹரன் உபதேச கமிட்டி தலைவர் பிஜூலால் அச்சன்கோவில் தேவசம் நிர்வாக அதிகாரி துளசிதரன் பிள்ளை ஆகியோர் செய்திருந்தனர்.
6 மணி அளவில் செங்கோட்டை விரைவு பேருந்து பணிமணை எதிரில் வந்தடைந்த நிறைபுத்தரி நெல்கதிர்கள் ஊர்வலத்திற்கு அச்சன்கோவில் திருவாபரணபெட்டி வரவேற்பு கமிட்டியினர் தலைமையில் தமிழகத்தை சேர்ந்த கமிட்டி நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி@ குட்டியப்பா பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.பின்னர் வாகனம் சபரிமலை நோக்கி புறப்பட்டது.--