
இன்று ஆடி சுவாதி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில் குவிந்த பக்தர்கள் கூட்டம்.
ஆடி சுவாதியை முன்னிட்டு ரத காவடி எடுத்து நேர்த்திக்கடன் வழிபாடு.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடானது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில் ஆகும். சிறந்த குரு ஸ்தலமாக கருதப்படும் இந்த கோவிலில்
நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருவதுடன் விசேஷ தினங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் அதிகமானோர் சாமி தரிசனம் செய்வது உடன் பல்வேறு நேர்த்தி கடன்களும் செய்து வருகின்றனர்.
மேலும் இன்று ஆடி சுவாதி என்பதாலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாளும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்துள்ளனர்.இதை யொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், 6 ஆறு மணிக்கு உதயமார்தாண்ட அபிஷேகமும் மற்ற கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடியதுடன் நாழிக்கிணறு தீர்த்தத்திலும் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் ஆடி சுவாதியை முன்னிட்டு கோவில் கிரி பிரகாரத்தில் ஏராளமான பக்தர்கள் ரத காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். மேலும் அதிகமான கூட்டத்தின் காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லக்கூடிய பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.