
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில், இரட்டைப்பதக்கம் வென்று டெல்லி விமான நிலையம் வந்த மனு பாக்கருக்கு ரசிகர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இது குறித்து மனு பாக்கர் கூறுகையில், இங்கே இவ்வளவு அன்பைப் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றார். 10 மீ தனி நபர் ஏர் பிஸ்டல், 10 மீ, ஏர் மிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்றிருந்தார். ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 3 (வெண்கலம்) பதக்கங்களை வென்றுள்ளது.