
கடந்த 1990-ல் ‘என் வீடு என் கணவர்’ என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான அஜித்குமார் 1993-ல் வெளியான அமராவதி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பின்னர் பல திரைப்படங்களில் நடித்து இன்று தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருகிறார். சினிமாவிலும் சரி, தனிப்பட்ட வாழ்விலும் சரி பல சோதனைகளை சந்தித்த அவர் அதையெல்லாம் சாதனையாக்கி கோடிக்கணக்கான மக்கள் மனங்களை வென்றுள்ளார்.