
டெல்லியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நேற்று சாலையில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது. டெல்லியின் முக்கிய பகுதியான ராஜீந்தர் நகர் பகுதியில் இயங்கி வந்த ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்திற்குள் மழை நீர் புகுந்ததால் தரைத்தளத்தில் இருந்த இரு மாணவர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவரும் நீரில் மூழ்கி இறந்தவரில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 2 மாணவர்களை மீட்கும் முகமாக டெல்லி தீயணைப்பு துறையினர் , தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவர்கள் பற்றி எந்த தகவலும் இல்லை. தேடும்படி தொடர்கிறது. இந்.நிலையில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தை ர்வகித்தஇரண்டு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே மாணவர்களின் சாலை மறியல் போராட்டம் தொடர்கிறது.