Advertiment

தனுசிற்கும் - சன் பிக்சர்க்கும் ராயன் படம்- ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது.

by Admin

சினிமா
தனுசிற்கும் - சன் பிக்சர்க்கும் ராயன் படம்- ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது.

தனுசிற்கும் - சன் டிவிக்கும் ராயன் படம் ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது.

இந்தியன் 2 படத்திற்கு பிறகு பெரிய படங்கள் வெற்றி பெறாது என்கிற ஒரு நிலைப்பாடு உருவாகி இருந்ததை உடைக்கும் முகமாக ராயன் படம் அமைந்துள்ளது.

தனுசு எழுதி- இயக்கி- நடித்துள்ள படம் இது.

. தாய் பிரசவ வழியில் துடித்துக் கொண்டிருக்கிற பொழுது என்ன குழந்தை பிறக்க வேண்டும் என்று தன் தம்பிகளிடம் கேட்கிற இளம் வயது தனுஷ்.. தம்பிகள் தங்களோடு விளையாடுவதற்கு தம்பி தான் வேண்டும் என்று சொல்ல... இளைய தனுஷ் தனக்கு தங்கை  வேண்டும் என்று சொல்ல. பின் பெயர் சூட்ட வேண்டும் என்று உள்ளூர் பூசாரியிடம் பெயர் வைக்கச் சொல்ல... தன் தங்கைக்கு தானே பெயர் சூட்ட வேண்டும் என்று ராயன் தனுசு சொல்ல.. பூசாரி ராயன் கெட்டிக்காரன் அவனே பெயர் சூட்டட்டும் என்று சொல்ல... தனுஷ் தன்னுடைய தங்கையினுடைய பெயரை துர்க்கா என்று சூட்டி மூன்று முறை காதில் சொல்கிறார்.

பெற்றோர் வெளியூர் சென்று விட்டு வருவதாக ராயனிடம்சொல்லி செல்கிறார்கள்.2 நாள் ஆன பின்பும் தாய் தந்தையர் வராததனால் உள்ளூர் பூசாரியிடம் அவர் இருப்பிடத்திற்கு சென்று கேட்க.. அவர் அவர்களை ஆறுதல் படுத்த... இங்கே தங்கிக் கொள்ளுங்கள் என்று  தங்க வைக்கிறார்.. இந்நிலையில் பூசாரியிடம் ஒருவர் வந்து பெண் குழந்தை வேண்டும் என்று கேட்க.. அதற்கு அவர் மூன்று பையன்கள் இருக்கிறார்கள் என்று சொல்ல... இல்லை பெண் பிள்ளை தான் கேட்கிறார்கள் என்று சொல்ல ...சரி என்று அவர் ஒப்புக்கொண்டு... இரவு வந்து குழந்தையை எடுத்துச் செல் என்று சொல்வதை ராயன் கேட்டு விட அங்கிருந்து தப்பிக்கும் பொழுது... பூசாரி தடுக்க.., தன் தங்கையை தூக்கிக் கொண்டு தன் தம்பிகளோடு சரக்கு ஏற்றி செல்லும் லாாியில் சரக்குகளோடு சென்னை கோயம்பேடு சென்று அடைகிறார்

. அங்கு பலருக்கு அறிமுகமான நபராக இருக்கும் செல்வராகவன் அவரிடம் தஞ்சம் அடைந்து அவர் வழியாக வீடு பார்த்து வேலையும் பார்க்கின்றார்.. தங்கை தம்பிகள் இருவரும் வளர்ந்து பெரியவர்களாகி .அண்ணன்களோடு சேர்ந்து ஃபாஸ்ட் ஃபுட் கடையில் வேலை செய்கிறார்கள்

. இதற்கிடையில் உள்ளூரில் இருக்கின்ற இரண்டு பிரபலமான ரவுடிகளுக்கு இடையில் ஏரியா பிரிப்பதில் சண்டை தொடர்கிறது. இவர்களை கட்டுப்படுத்தும் நோக்கோடு ஏசியாக பிரகாஷ்ராஜ் வருகிறார்

அவர் இரு ரவுடிகளில் சேதுவை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று தனக்கு உதவியாக இருக்கின்ற பெண் போலீசிடமும் ஆண் போலீசிடமும் விவாதித்து தன் தந்தை சப் இன்ஸ்பெக்டராக இதே ஊரில் இருக்கும் பொழுது உயிரோடு கொளுத்திய ரவுடிதான் இவன் அவனை நான் பழிவாங்க வேண்டும் என்கிற விதமாக அவர் பேசுகிறார்.

பிறகு எதிர்பாராத விதமாக ராயனுடைய தம்பிக்கு எதிரிகளால் தொல்லை ஏற்படும் பொழுது ... கொலை செய்யக்கூடிய நிலை ஏற்படுகிறது .மூவரும் கொலையாளிகளாக இருந்து தப்பித்து யாருக்கும் தெரியாமல் வாழ்கிற சூழலில்.. பிரகாஷ்ராஜ் திட்டம் வெற்றியடைகிறது

 தங்கையை அழைத்துக் கொண்டு....... தான் வந்தது போன்று லாரியில் தங்கை- தம்பியினுடைய குழந்தையையும் எடுத்துச் செல்கிறார்கள்..

படம் ரத்த உறவை-பாசத்தை அடிப்படையாக கொண்டதோடு துரோகத்தை செய்பவர்கள் உடன் இருக்கிறார்கள் என்கிற கருத்தையும் வலியுறுத்தி நேர்த்தியான திரைக்கதையோடு  படம் நகர்கிறது.

தனுஷின் நடிப்பு, கதை, திரைக்கதை, இயக்கம், பாடல்களுடன் சொல்லும் படியாக இருக்கின்றது.அங்கங்கே மகாராஜா பட சாயல்.

அதிகமான கொலை சம்பவங்களை தவிர்த்துப் பார்த்தால் படம் விறுவிறுப்பாக செல்கிறது. இது சமீப காலத் திரைத்துறை போக்கின் வெளிப்பாடு.

 

Share via