Advertiment

ஆடி பூஜைகளுக்கு சபரிமலை நடை 15ல் திறப்பு;

by Editor

ஆன்மீகம்
ஆடி பூஜைகளுக்கு சபரிமலை நடை 15ல் திறப்பு;

 

ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை ஒரு நாள் முன்னதாக வரும் 15ம் தேதி திறக்கிறது. 20 வரை பூஜைகள் நடைபெறும்.எல்லா மாதமும் முதல் ஐந்து நாட்கள் சபரிமலையில் பூஜைகள் நடைபெறும். இதற்காக அதற்கு முந்தைய  நாளில் மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படுவது வழக்கம். 

தமிழ்நாட்டில் ஆடி ஒன்றாம் தேதி ஜூலை 17ல் வருகிறது. ஆனால் கேரளாவில் ஒரு நாள் முன்னதாக வருகிறது எனவே இந்த ஆண்டு  16ல் ஆடி ஒன்றாகும். இதனால் சபரிமலை நடை 15ம் தேதி மாலை 5:00 மணிக்கு திறக்கிறது. அன்று பூஜைகள் எதுவும் இருக்காது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். 16 அதிகாலை 5:00 க்கு நடை திறந்ததும் தந்திரி மகேஷ் மோகனரரு ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் நடத்திய பின் நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார். 

எல்லா நாட்களிலும் கணபதி ஹோமம், உஷ பூஜை, உச்ச பூஜை, களபாபிஷேகம், கலசாபிஷேகம், மாலையில் தீபாராதனை இரவு அத்தாழ பூஜை ஆகியவை நடைபெறும். இவற்றுடன் தினமும் இரவு 7:00 மணிக்கு படி பூஜை நடைபெறும்.எல்லா நாட்களிலும் காலை முதல் இரவு வரை நடைபெறும் உதயாஸ்தமன பூஜையும் உண்டு. 20 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். 
 

Share via