
தற்பொழுது, சென்னை முழுவதும் ஓட்டப்பட்டுள்ள நேசிப்பாயா பட வால்போஸ்டர்... பலரின் பார்வையை பெற்றிருக்கும் நிலையில் ,மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகன் ஆகாஷ் நடிக்கும். இந்த படத்தில் ட்ரைலா் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில் ,லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா கலந்து கொண்டு ஆகாசை அறிமுகப்படுத்தி வைத்தார்..
எப்பொழுதும் தான் நடித்த படத்திற்கு கூட பிரமோஷன் செய்யாத நயன்தாரா அதர்வாவின் தம்பி நடிக்கும் முதல் படத்திற்கு வந்திருந்ததை அனைவரும் விமர்சித்து வரும் நிலையில், பில்லா பட இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்குதலில் படம் வெளிவர இருப்பதால் நயன்தாரா இயக்குனர் மீது கொண்ட மதிப்பின் காரணமாக இவ்விழாவில் கலந்து கொண்டிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். இசை யுவன் சங்கர் ராஜா .