Advertiment

கலை – அறிவியல் கல்லூரி சேர்க்கை:  மாணவர்கள் போலி மதிப்பெண் சான்றிதழை  பதிவேற்றியிருந்தால் கடும் நடவடிக்கை

by Editor

கல்வி
கலை – அறிவியல் கல்லூரி சேர்க்கை:  மாணவர்கள் போலி மதிப்பெண் சான்றிதழை  பதிவேற்றியிருந்தால் கடும் நடவடிக்கை



கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மாணவர்கள் போலி மதிப்பெண் சான்றிதழை பதிவேற்றம் செய்திருந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.


தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவ மாணவிகள் சேருவதற்கு கடந்த 26ந்தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். கடந்த சில ஆண்டுகளாகவே கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு, மாணவர்களிடையே அதிக ஆர்வம் இருந்து வருகிறது. இதற்காக கல்லூரிகளில் மாணவர்கள் போட்டிப்போட்டு விண்ணப்பிக்கின்றனர்.


அந்தவகையில் நடப்பாண்டும் அரசு, தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பப்பதிவு தொடங்கிய நாளில் இருந்து மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை பொறுத்தவரையில் விண்ணப்பப்பதிவு தொடங்கிய முதல் 8 நாட்களிலேயே சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருந்ததாக உயர்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


அதன்படி, விண்ணப்பப்பதிவு செய்வதற்கு  (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும்.
கடந்த ஆண்டு கிட்டதட்ட 3 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், இந்த ஆண்டும் அந்த அளவுக்கு விண்ணப்பம் வரும் என்று உயர்கல்வித்துறை எதிர்பார்த்து இருக்கிறது. இந்த நிலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.


அதன்படி, ஆன்லைன் மூலமே விண்ணப்பப்பதிவு பெறப்பட்டு, மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். மாணவர் சேர்க்கையை அரசின் முறையான நெறிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி நடத்தப்பட வேண்டும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவுகளுக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த இடங்கள் முழுவதும் நிரப்பப்பட்டுவிட்டால், கூடுதல் இடங்களில் மாணவ-மாணவிகளை சேர்ந்த கல்லூரிக்கல்வி இயக்ககத்திடம் அனுமதி கேட்டு பெறலாம்.


மாணவர் சேர்க்கையில் விதிமீறல்கள், குழப்பங்கள் ஏதேனும் ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வரும், கல்லூரி சார்பில் நியமிக்கப்பட்டு இருக்கும் சேர்க்கைக்குழுவும் தான் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்.மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவில் பதிவேற்றம் செய்திருக்கும் சான்றிதழ்களில், மதிப்பெண் சான்றிதழ் போலி என்று கண்டறியப்பட்டால், அந்த மாணவரின் சேர்க்கையை ரத்து செய்வதோடு, சம்பந்தப்பட்ட மாணவர் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க இருக்கின்றன.

Share via

More Stories