
நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ள 'பெல்பாட்டம்' திரைப்படம் வருகிற 19-ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. கடந்த 1980-ம் ஆண்டில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஸ்பை த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில், நடிகை லாரா தத்தா இந்திரா காந்தியாக நடித்துள்ளார். வெளியான டிரெய்லரில் அப்படியே இந்திரா காந்தி தோற்றத்தை பிரதிபலிக்கும் அளவுக்கு தோற்றத்திலும் நடிப்பிலும் நடிகை லாரா தத்தா கவனம் ஈர்த்துள்ளார். அவரது தோற்றம் சமூக வலைதளங்களில் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
கடந்த 2000-ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற லாரா தத்தா தமிழில் 2002-ம் ஆண்டு வெளியான 'அரசாட்சி' படத்தில் நடித்திருக்கிறார். லாரா தத்தா, தமிழ்நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியை கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.