Advertiment

ரஜினி நடிக்கும் தலைவர் 171 படத்தின் போஸ்டர்  வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

by Admin

சினிமா
ரஜினி  நடிக்கும் தலைவர் 171 படத்தின் போஸ்டர்  வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ரஜினி கதாநாயகனாக நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் தலைவர் 171 படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது .இப் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆறு மணிக்கு வெளியாகும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தம் எக்ஸ் வலைத்தளத்தில்  அறிவிப்பு செய்திருந்த நிலையில், குறிப்பிட்ட வாறே படத்தினுடைய போஸ்டர்  வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.. ரஜினி கூலிங் கிளாஸ் அணிந்து மிக இளமையான தோற்றத்தோடு வாட்ச்சுகளால் ஆன கை விலங்கு போட்டிருப்பது மாதிரியாக போஸ்டர் வெளியாகி உள்ளது. இப்பொழுது ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கும் வேட்டையின் படத்தில் ரஜினி நடித்து வருகிற நிலையில், இந்த 171 வது பட போஸ்டர் மூலம் அடுத்த கட்ட நகர்வுக்கு தயாராகி விட்டார் ,சூப்பர் ஸ்டார்.இசை அனிருத்.

 

Share via