
ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ள 'ரெபல்' திரைப்படம் கடந்த 22ஆம் தேதி வெளியாகி, திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. 'ரெபல்' திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ஏப்ரல் 4 -ஆம் தேதி ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ள 'கள்வன்' திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் பட்டியல் இதோடு முடியவில்லை.. ஏப்ரல்- 11ஆம் தேதி இன்னொரு படமான 'டியர்' வெளியாகிறது. இதனால், ரசிகர்களுக்கு மகிழ்ச்சி என்றாலும், தொடர் வெளியீடுகளால் படங்களின் வசூல் பாதிக்கப்படும் என மூன்று தயாரிப்பாளர்களும் கலக்கமடைந்துள்ளனர்.