Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

சென்னை ஐடிஐ மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு

by Admin

கல்வி
சென்னை ஐடிஐ மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு



   
தமிழக அரசு அறிவித்த தளர்வுகளை தொடர்ந்து தொழிற்பயிற்சி நிலையங்கள் கடந்த ஜூலை 19-ந் தேதி முதல் செயல்பட ஆரம்பித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

 இருப்பினும், சில தளர்வுகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் தொழிற்பயிற்சி நிலையங்கள் கடந்த ஜூலை 19-ந் தேதி முதல் செயல்பட அரசு அனுமதி அளித்தது.

இந்த நிலையில், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு முதுநிலை பயிற்சி மாணவர்கள், அவர்கள் பயிற்சி பெறும் தொழில்பயிற்சி நிலையங்களில் வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் சீருடையுடன் இந்த கல்வியாண்டில் ஆகஸ்டு மாதம் வரை சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

அரசு பஸ்கள்

புதிய இலவச பயண அட்டை அச்சிட்டு வழங்குவதில் உள்ள கால அளவை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்டு மாதம் வரை மாணவர்களை அனுமதிக்குமாறு அனைத்து நடத்துனர்களுக்கும் போக்குவரத்துத்துறை சென்னை மண்டல துணை மேலாளர் சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளார்.
 

Share via

More Stories