Advertiment

பிரபல நடிகர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி

by Staff

சினிமா
பிரபல நடிகர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி

குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் இயக்குனராக மாறிய நடிகர் சூர்யா கிரண் திடீர் என மரணமடைந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போன்ற தென்னிந்திய மொழிகளிலும் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மாஸ்டர் சுரேஷ் என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், பின்னர் சூர்யா கிரண் என தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டு, தெலுங்கில் சில படங்களை இயக்கினார். சமீபகாலமாக உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்த சூர்யா கிரண், இன்று காலமானார். இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் பிரபலமான சுஜிதாவின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share via