
கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொறியியல் படிப்புக்களுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கி 8 நாட்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் B.E., B.Tech.
, படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை 26-ம் தேதி தொடங்கியது.
விண்ணப்ப பதிவு தொடங்கியதில் இருந்தே அதிகளவிலான மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர ஆர்வமுடன் விண்ணப்பித்து வரும் நிலையில், 8-வது நாளான நேற்று ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 611 பேர் விண்ணப்பித்துள்ளதாக பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது.
பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்க மேலும் 20 நாட்கள் அவகாசம் உள்ளதால், இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்றும் பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு கூறியுள்ளது.