Advertiment

அன்னை தமிழில் அர்ச்சனை அறிவிப்பு பலகை-முதல்வர் வெளியிட்டார்

by Editor

ஆன்மீகம்
அன்னை தமிழில் அர்ச்சனை அறிவிப்பு பலகை-முதல்வர் வெளியிட்டார்

அடுத்த வாரம் முதல் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என அமைச்சர் சேகர் பாபு அறிவித்து இருந்த நிலையில், இது தொடர்பான அறிவிப்புப் பலகையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை நடைபெற வேண்டும் என்பது பலரது விருப்பமாக இருந்து வருகிறது.இந்தச் சூழலில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் விரைவில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என அமைச்சர் சேகர் பாபு கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

'அன்னை தமிழில் அர்ச்சனை' என்று தொடங்கப்படும் இந்தத் திட்டத்தில் முதற்கட்டமாக 47 பெரிய கோவில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 06) அருள்மிகு கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கப்படவுள்ளது.

இந்நிலையில் இதற்கான அறிவிப்புப் பலகையை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அப்போது அமைச்சர் சேகர் பாபு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ குமரகுருபரன் உடன் இருந்தனர். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இந்த பலகையில் குருக்களின் பெயர்கள், அலைபேசி எண்கள் இடம் பெற்றிருக்கும்.

Share via