Advertiment

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜைகளுக்காக நாளை மாலை நடை திறக்கப்படவுள்ளது

by Editor

ஆன்மீகம்
 சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜைகளுக்காக நாளை மாலை நடை திறக்கப்படவுள்ளது

கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜைகளுக்காக நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை நடை திறக்கப்படவுள்ளது. மகர விளக்கு பூஜைகளுக்குப் பிறகு நாளை மாசி மாத பூஜைக்காக கோவில் திறக்கப்படுகிறது. நாளை மாலை 5 மணிக்கு நந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைப்பார். நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை முதல் வரும் 18ஆம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், வனத்துறையும் இணைந்து செய்து வருகிறது

Share via