Advertiment

கிராமப்புற இளைஞர்களுக்கு இலவச தொழில் பயிற்சி

by Admin

கல்வி
கிராமப்புற இளைஞர்களுக்கு இலவச தொழில் பயிற்சி



பயிற்சி முடித்தோருக்கு தொழில் துவங்க கடன் பெறுவது குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.

திருப்பூர் அனுப்பர்பாளையம்புதூர் கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச போட்டோ கிராபி, வீடியோ கிராபி பயிற்சி வகுப்பு வரும் 12-ந்தேதி தொடங்க உள்ளது.

30 நாட்கள் முழு நேர பயிற்சி பெற பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
எழுத படிக்க தெரிந்த 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். கட்டணம் இல்லை. முடிவில் மத்திய அரசின் ‘ஸ்கில் இந்தியா’ சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சி முடித்தோருக்கு தொழில் துவங்க கடன் பெறுவது குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. நேரில் வர வேண்டும். முதலில் வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 0421 2256626 என்ற தொலைபேசி எண்ணில் முன்பதிவு செய்யலாம் என நிலைய இயக்குனர் பூபதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share via

More Stories