Advertiment

விஜய் மிகப்பெரிய நடிகராக வளர்ந்து அரசியல் கட்சியையும் ஆரம்பிக்கிற நிலைக்கு உயர்ந்து உள்ளார்-ரஜினிகாந்த்

by Admin

சினிமா
விஜய் மிகப்பெரிய நடிகராக வளர்ந்து அரசியல் கட்சியையும் ஆரம்பிக்கிற நிலைக்கு உயர்ந்து உள்ளார்-ரஜினிகாந்த்

 ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளி வரவுள்ள லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் , விச் ராந்த் ஆகியோர் நடித்துள்ள படம் பிப்ரவரி மாதத்தில் வெளிவர உள்ளது. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விஜய்யை தன்னோடு சேர்த்து பேசுவது வருத்தம் அளிப்பதாக சொன்னார். என்னோடு விஜய் சேர்த்து பேசுவது எனக்கு மரியாதை குறைவு என்றும் விஜயோடு என்னை சேர்த்து பேசுவது அவருக்கு கௌரவ குறைச்சல் என்றும் அதனால் தயவு செய்து இருவரை பற்றிய எந்த பேச்சையும் யாரும் தொடர வேண்டாம் என்றும் தான் சாதாரணமாகவே கழுகு -காக்கா கதையை சொன்னதாகவும் அது வேறு மாதிரியாக திரித்து சொல்லப்பட்டது, மன வேதனையை உருவாக்கியுள்ளதாகவும் விஜய் நான் பார்த்து வளர்ந்த பையன். அவருடைய தந்தையார் எஸ். ஏ. சந்திரசேகர் அவர் படித்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் என்னிடம் அழைத்து வந்து அவருக்கு ஆலோசனை சொல்லச் சொன்னதாகவும் இன்று அவர் மிகப்பெரிய நடிகராக வளர்ந்து அரசியல் கட்சியையும் ஆரம்பிக்கிற நிலைக்கு உயர்ந்து உள்ளார்.அதற்கு அவர் கடின உழைப்பே காரணம். அவர் மேலும் வளர வேண்டும் என்றும் ரஜினிகாந்த் தன் கருத்தை வெளியிட்டார் ..சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து இனி யாரும் என்னோடு விஜய்யை சம்பந்தப்படுத்தி பேச வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்..

Share via