
இந்துக்களின் 500 ஆண்டு கால கனவு இன்று நிறைவேறியது .பல்வேறு போராட்டங்களுக்கு பின்னால் ராமஜென்ம பூமியில் இன்று பலராமன் பிரதிஷ்டை பிரதமர் நரேந்திர மோடியால் நிகழ்த்தப்பட்டது.. விஷ்ணுவின் பத்து அவதாரங்களில், ஏழாவது அவதாம் ராம அவதாரம்.... அயோத்தியின் சக்கரவர்த்தியாக திகழ்ந்த தசரதனின் மகனாக பிறந்த ராமர், எப்பொழுதெல்லாம் பூமியில் அநீதிகள் தோன்றுகிறதோ அப்பொழுதெல்லாம் நான் தோன்றுவேன் என்று பகவத் கீதையின் அர்ச்சுனனுக்கு போதித்த கீதா உபதேசத்தில் படி.. ஸ்ரீ ராமபிரான் அயோத்தியில் பிறந்து ..இராவணனால் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளுக்கு முடிவு கட்ட ராம அவதாரமாக பிறந்தார்.
இந்த பிராண பிரதிஷ்டை பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி 11 நாட்கள் விரதம் இருந்து கலந்து கொண்டார்.. சிரித்த முகத்தோடு வசீகரிக்க கூடியதாக 4.25 அடி உயரம் உடைய பலராமர் சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கிரீடம் வைத்து அலங்கரிக்கப்பட்ட ஆபரணங்கள்- மாலைகளோடு கருப்பு வண்ணம் உடைய பலராமர் இன்றிலிருந்து பக்தா்களுக்கு அருள் பாலிக்கிறாா்.. ஒருவனுக்கு ஒருத்தி என்கிற தாரக மந்திரம் ராமரில் இருந்து தொடங்குகிறது. 14 ஆண்டுகள் வனவாசம் இருந்து இன்னொரு பெண்ணை ஏறிட்டு பார்க்காத ராமர் ... அவாின் இந்த பிறன்மனை நோக்கா பேராண்மை அறமே மக்களுக்கு ராமாயண இதிகாசம் உணா்த்துகிறது..