
அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலமாக திரையுலகத்திற்கு அறிமுகமான விஜய் தேவர கொண்டாவும் நடிகை ராஸ்மிகா மந்தனாவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன .இருவரும் சேர்ந்து நடித்த கீதாகோவிந்தம் படத்தில் நடித்ததன் மூலம் இருவரும் சரியான ஜோடியாக இருக்கிறார்கள் என்கிற கருத்தை உருவாக்கி ...அதன் மூலம் அவர்களைப் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இது குறித்து இருவரும், எந்த நிலையிலும் அதில் கூறாமல் இருந்தது. கிசுகிசு தொடர்வதற்கு வாய்ப்பாகவே அமைந்தது. இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பிப்ரவரி மாதத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் அண்மையில் செய்திகள் சமூக ஊடகங்களில் பரவின. இது குறித்து விஜய தேவர்கொண்டா ஆண்டுதோறும், இது போன்று வதந்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.இந்த ஆண்டும், ஒருமுறை மட்டுமல்லாது ஆண்டுதோறும் தனக்கு திருமணம் நடத்தி வைப்பதாக பதில் அளித்துள்ளார்.