
27 நட்சத்திரங்களில் பொருத்தம் பார்க்காமல் திருமணம்
மிருகசீரிடம், மகம், சுவாதி, அனுஷம் இந்த நான்கு நட்சத்திரங்கள் பெண் அல்லது ஆணாக இருந்தாலும் திருமணம் செய்யலாம்.
அக்கா – தங்கை இருவருக்கும் ஒரே முகூர்த்தத்தில் திருமணம் செய்யலாமா?
ஒரே தாய்வயிற்றில் பிறந்த பெண்களுக்குத் திருமணம் செய்தல் கூடாது.. ஆறுமாதம் முடிந்தபின்பு தங்கைக்கு செய்விப்பது உத்தமம்… ஆணாக இருந்தால் செய்யலாம்.
புண்ணியமான காலம் என்று சொல்லப்படுவது எதனை?
சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் காலம் உத்தராயணம் என்று அழைக்கப்படுகிறது. இது தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி இந்த ஆறுமாத காலமாகும். இவை தேவர்களின் ஒரு பகல் பொழுது காலமாகும் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அதனால், இது புண்ணிய காலமாகக் கருதப்படுவதால் இம்மாதத்தில் திருமணம் செய்வது சிறப்பு.