
இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள ‘குண்டூர் காரம்’ படம் உலகம் முழுவதும் முதல் நாள் ரூ.94 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் சக்ராந்தியை முன்னிட்டு நேற்று (ஜன.12) திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.94 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் மகேஷ்பாபு படங்களில் அதிகபட்ச ஓபனிங் கொண்ட படம் இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடக்காந்த ஆண்டு மகேஷ் பாபு நடிப்பில் வெளியான சர்க்கார் வாரிப்பாட்டா ரூ.75 கோடி வசூல் செய்திருந்தது.