
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படமும் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படமும் இன்று வெளியாகி உள்ளது. தொடர் விடுமுறையின் காரணமாக புதிய படங்களின் வரவு ரசிகர்களுடைய பொழுதுபோக்கு அம்சத்தோடு கூடிய திரைப்பட வருகை அபரிவிதமான வசூல் வேட்டையாக மாறும்.பொங்கல் அன்று பல்வேறு திரைப்படங்கள் வெளி வந்தாலும் பிரதான நடிகர்கள் நடித்த திரைப்படத்திற்கு மட்டுமே அதிக வரவேற்பு எப்பொழுதும் இருக்கும். அந்த அளவில் இந்த இரண்டு படங்களின் வருகை சிவகார்த்திகேயன்- தனுஷின் ரசிகர்களுக்கு விருந்தாக இருந்தாலும் பண்டிகை கொண்டாட்டத்தில் இந்த திரைப்பட நிறுவனங்களுக்கு அதிகமான வசூலை அள்ளித் தரக் கூடியதாக இருக்கும்.இன்று சிவகார்த்திகேயன் குரோம்பேட்டை வெற்றி திரையரங்கிற்கு தன்னுடைய அயலான் படத்தை நேரில் சென்று பார்த்தார்.