
உலக புகழ் பெற்ற திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலில் திருமலை திருப்பதியில் உள்ளதை போல் மிகவும் பிரமாண்டமான *ஶ்ரீவாரி துலாபாரம்* அமைக்கப் பட்டுள்ளது.துலாபாரம் செலுத்த விரும்பும் பக்தர்கள் கற்கண்டு வெள்ளம் அனைத்து பல வகைகள் வாழைப்பழம் ஏலக்காய் பச்சரிசி சில்லறை நாணயம் நவதானியங்கள் திராட்சை பேரீச்சை தங்களது எடைக்கு இணையாக செலுத்தலாம் அதற்கான உரிய ரசீது அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்
இந்த முயற்சியை மேற்கொண்ட அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், ஈஸ்வரி ஸ்டோர் உரிமையாளர் வாசு தேவன், சுசீலா, கேப்டன் பிரபாகரன், மற்றும் இராமானுஜம், மற்றும் செயல் அலுவலர் முருகன்,திருக்கோயில் பட்டர்கள்,ராமமூர்த்தி,,ரமேஷ்,,ஜெகநாதன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். இந்த முயற்சியை மேற்கொண்ட அறங்காவலர் குழு தலைவர், மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் இறை பக்தர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.