
சபரிமலையில் மகர விளக்கு பூஜை ஜன., 15ம் தேதி நடக்க உள்ள நிலையில் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.சபரிமலையில் மகர விளக்கு காலத்தின் முக்கிய நிகழ்வாக மகரஜோதி தரிசனம் வரும் 15-ல் நடைபெறுகிறது.பொன்னம்பல மேட்டில் தெரியும் மகரஜோதியையும் அந்த நேரத்தில் வானில் ஜொலிக்கும் மகர நட்சத்திரத்தையும் தரிசிக்க பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சபரிமலை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.
மகரஜோதி விழாவின் முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் 12-ல் எருமேரியில் நடைபெறும். அன்று காலை 11:00 மணிக்கு பின்னர் ஆகாயத்தில் வட்டமிடும் கருடனை கண்ட பின்னர் அம்பலப்புழா பக்தர்களும், மாலை 3.00 மணிக்கு பின்னர் ஆகாயத்தில் ஜொலிக்கும் மகர நட்சத்திரத்தை கண்ட பின்னர் ஆலங்காடு பக்தர்களும் பேட்டை துள்ளுவர்.இதை தொடர்ந்து எரிமேலியில் பேட்டை துள்ளல் நிறைவு பெறும்
.பொன்னம்பலமேட்டில் மகரஜோதியும், மகர நட்சத்திரமும் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். ஜோதி நாளில் ஏற்படும் நெரிசலை தவிர்க்கும் வகையில் ஆன்லைன் முன்பதிவு குறைக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் ஸ்பாட் புக்கிங் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுவர் என்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.