Advertiment

ஆன்லைனில் TRB தேர்வுகள் நடைபெறும்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு 

by Professor

கல்வி
ஆன்லைனில் TRB தேர்வுகள் நடைபெறும்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு 


 

ஒத்திவைக்கப்பட்டுள்ள டி ஆர் .பி.  தேர்வுகள் செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஆன்லைனில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்தது. இதனையடுத்து அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும்,TET, TRB தேர்வுகளும் நடத்தப்படவில்லை. பின்னர் கொரோனா காரணாக கடந்த 2 ஆண்டுகளாக எந்த தேர்வுகளும் நடத்தப்படாமல் உள்ளது. 


இந்நிலையில்,ஒத்திவைக்கப்பட்டுள்ள TRB தேர்வுகள் செப்டம்பர் முதல் நவம்பர் வரை End To End Encrypted என்ற முறையில் ஆன்லைனில் தேர்வுகள் நடைபெறும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி,அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள கணினி ஆய்வகங்களில் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், TET, பாலிடெக்னிக் விரிவுரையாளர், உதவி பேராசிரியர் போன்ற தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்பட உள்ளது. அதேபோல், அரசு, அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள கணினி ஆய்வகங்களில் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Share via

More Stories