Advertiment

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல். ஐ .சி  படத்தில் பிரதீப் ரங்க நாதன் கதாநாயகன்-கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி

by Admin

சினிமா
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல். ஐ .சி   படத்தில் பிரதீப் ரங்க நாதன் கதாநாயகன்-கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்குப் பிறகு விக்னேஷ் சிவன், அஜித்குமார் நடிப்பில் விடா முயற்சி படத்தை இயக்குவதாக இருந்தது. பின் அப்படம் கைவிடப்பட்டு சிவகார்த்திகேயனை கதாநாயகனாக கொண்டு விக்னேஷ் சிவன் படம் இயக்குவதாக தகவல்கள் வந்தன. ஆனால், அதுவும் வெறும் செய்தியாகவே போயிற்று. இந் நிலையில் லவ் டுடே பிரதீப் ரங்க நாதனை கதாநாயகனாக வைத்து விக்னேஷ் சிவன் படம் இயக்க உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன .இது உண்மை என்பதற்கான ஒரு நிகழ்வு நேற்று மிக எளிய முறையில் நடந்தது. 7 கிரீன்ஸ் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் தயாரிக்கும் எல். ஐ .சி  [லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்] என்கிற படத்தில் பிரதீப் ரங்க நாதனை கதாநாயகனாக அவரோடு இணைந்து எஸ். ஜே. சூர்யாவும் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டியும்  நடிக்க இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதற்கான பூஜை முடிந்துள்ள நிலையில் படம் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

 

Share via