Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

அரசு கல்லூரி மாணவ மாணவிகளுடலான கலந்துரையாடல் நிகழ்ச்சி -மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி பங்கேற்பு.

by Admin

கல்வி
 அரசு  கல்லூரி மாணவ மாணவிகளுடலான கலந்துரையாடல் நிகழ்ச்சி -மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி பங்கேற்பு.

 கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளம் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல் விழிப்புணர்வு முகாம் மற்றும் தேர்தலில் நாம் வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்தும் மாணவ மாணவிகளுடலான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது

கல்லூரி முதல்வ நிர்மலா  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாவட்ட  தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி பங்கேற்றார்...

இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி 18 வயது நிரம்பிய ஆண் பெண் இரு பாலரும் நாம் வாக்களிப்பதற்கான அவசியம் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும், 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் அடையாள அட்டை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்...

இதனைத் தொடர்ந்து கல்லூரியின் பின்புறம் ஆண்,பெண், இரு பாலருக்கும் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 5.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விடுதி கட்டப்படுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு கடந்த ஒர் ஆண்டுக்கு முன்பாக மகளிர் விடுதி திறக்கபட்டது..

153 மாணவிகள் தங்கி பயிலும் வகையில் விடுதி அமைக்கப்பட்டது ஆனால் 20 மாணவிகள் மட்டுமே அங்கு தங்கி பயின்று வந்தனர் வெறும் 20 மாணவிகளைக் கொண்டு விடுதியை நடத்த முடியாதா காரணத்தினால் மகளிர் விடுதி நீண்ட காலமாக பூட்டியே கிடக்கிறது

இந்நிலையில் இன்று கல்லூரிக்கு வருகை புரிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் திடீரென மகளிர் விடுதியை ஆய்வு மேற்கொண்டார் அப்போது அங்கு புதர் மண்டி பொருட்கள் வளர்ந்தும் வேலி மரங்கள் முளைத்தும், பறவைகளின் புகலிடம் ஆகவும் வ விஷ பூச்சிகள் உள்ளே நடமாட்டமும் அதிகமாக காணப்பட்டு பாழடைந்த கட்டிடமாக காட்சியளித்ததை கண்டு மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி அடைந்தார்

உடனடியாக அங்கு இருந்த கோட்டாட்சியர், ஜேன் கிறிஸ்டி பாய் வட்டாச்சியர் லெனின் இக்கட்டிடத்தை வேறு ஏதேனும் பயன்பாட்டிற்கு கொண்டுவர முடியுமா அல்லது மாணவிகளின் வருகையை அதிகப்படுத்தி அவர்களுக்கு முறையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர முடியுமா என்ற கோணத்தில் கேட்டறிந்தார்....

 

Share via

More Stories