
தென் மாவட்டங்களில் திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஆய்க்குடியில் கந்த சஷ்டி திருவிழா பெரும் விமர்சியாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
முருகனின் ஆறு படை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் கோவில் கந்த சஷ்ட்டி சூரசம்கார திருவிழா வெகு விமர்ச்சையாக நடைபெறுவது வழக்கம் . அதற்கு அடுத்தப் படியாக வெகு விமர்ச்சையாக முருகனின் எல்லாம் படைவீடாக பக்தர்களால் பாவிக்கபப்டுவது தென்காசி மாவட்டம் ஆய்க்குடி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த ஆலயத்தில் கடந்த திங்களன்று கொடியேற்றத்துடன் கந்த சஷ்ட்டி திருவிழா தொடங்கியது. நாள்தோறும் சுவாமி பகல் மற்றும் இரவு வேளைகளில் ரிஷபம், மயில், யானை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதிஉலாநடைபெற்றது.மேலும் தினமும் சிறப்பு அலங்கார ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்றது.ஆறாம் திருநாளான இன்று மாலை சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடைபெற்றது. இன்று நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் தென்காசி மாவத்திலுள்ள செங்கோட்டை,கடையநல்லூர் ,தென்காசி, நயினரகம், சுரண்டை ,சாம்பவர் வடகரை,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகா முருகா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.நாளை ஏழாம் திருநாளான அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு பால், பன்னீர் இளநீர் சந்தனம் உள்ளிட் பதினாறு வகையான அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீப கட்டப்படும். அதன் பின்னர் சுவாமி அனுமன் நதி ஆற்றில் தீர்த்தவாரி (மஞ்சள்நீராட்டு விழா) நடைபெறும்.