
இன்று குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு தமிழக பள்ளி கல்வித்துறை சார்பாக நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற 114 அரசு பள்ளிகளுக்கு கேடயங்களையும் கட்டுரை- ஓவியம்- பேச்சுப் போட்டிகளில் வென்ற 180 மாணவ-மாணவியர்களுக்கு பரிசு பொருட்களை பள்ளி கல்வித்துறை சார்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்..
இந்நிகழ்வில்,பள்ளிகளில் உடைய உள்கட்டமைப்பு கற்றல் சூழல் போன்ற தகவமைப்பை கொண்டிருக்கின்ற பள்ளிகளுக்கும் கேடயங்கள் வழங்கி கௌரவப்படுத்தப்பட்டன. விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ,இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் கலந்து கொண்டனர்.