Advertiment

160 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..

by Admin

விளையாட்டு
 160 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..

இன்று பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியும் நெதர்லாந்து அணியும் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து களத்தில் இறங்கி விளையாடியது .

இந்திய அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் கே எல் ராகுல் கூட்டணியில் மிக விறுவிறுப்பான ஆட்டத்தின் மூலம் சிக்ஸர் போருமாகஇருவரும் மாறி மாறி அடித்து ...இந்திய அணியை ஒரு புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர் .ஸ்ரேயாஸ் ஐயர் 110  ரன்களும் கே எல் ராகுல் 100 கடந்த நிலையில் ஒரு பந்து மிச்சம் இருக்கிற நிலையில் அவுட் ஆகி வெளியே போக... சூரியகுமார் யாதவ்  ஒரு ரன் எடுக்க இந்தியா 410 கண்களை எடுத்து தன் ஆட்டத்தை வலுப்படுத்தியது. 

: இந்த ஆட்டத்தில், இந்திய வீரர்கள் மூவர் ஐம்பதுக்கு மேலும் இருவர் 100க்கு மேலும் அடித்து சாதனை புரிந்துள்ளனர்..411 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கோடு களம் இறங்கிய நெதர்லாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 250 ரன்னில் நாற்பத்தி ஏழு புள்ளி ஐந்து ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து இந்தியாவிடம் தோல்வி அடைந்தது. 160 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற அணியாக தென்னாப்பிரிக்கா, இருமுறைஆஸ்திரேலியா ,இலங்கை அணிகள் இருந்த வரிசையில் இந்திய அணியும் இந்த உலகக் கோப்பையில் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பது போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று  தான் ஒரு பலம் வாய்ந்த அணியாக உலகுக்கு முன்னால் நிரூபித்து உள்ளது.. மும்பை வான்கடே மைதானத்தில் வரும் 15ஆம் தேதி இந்திய அணியும்  நியூசிலாந்து அணியும் மோதும் அரை இறுதி ஆட்டம் நடைபெற உள்ளது..

 

Share via